சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்ரோஷமான பாணிக்கு புகழ்பெற்றவர்.
ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட்டை கூடுதல் நேரத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கூடுதல் நேரத்தின்போது ரியல் மாட்ரிட் வீரர் ரூடிகர், வினிசியஸ் ஜுனியர் நடுவரின் மீது பாட்டிகளையும் ஐஸ் கட்டிகளையும் தூக்கி வீசுவார்கள்.
Real Madrid players lost control last night as Jude Bellingham, Antonio Rüdiger and Lucas Vázquez saw red.
— Carol Radull (@CarolRadull) April 27, 2025
Rudiger was sent off for throwing an object toward the referee pic.twitter.com/XiX7iETgLz
நடுவரை அடிக்கவும் பாய்ந்த ரூடிகரை ரியல் மாட்ரிட் அணி உதவியாளர்கள் இழுத்துப் பிடித்தனர். பின்னர் அவரை திடலில் இருந்து வெளியேற்றினார்கள்.
இந்தப் போட்டியில் அன்டோனியோ ரூடிகர் (120+3’), லூகாஸ் வாஸ்கியூஸ் (120+3), ஜுட் பெல்லிங்ஹாம் (120+4’) நிமிஷங்களில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
நடுவரைத் தாக்கில் 2 ஆண்டுகள் அல்லது 10-12 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நடுவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதால் தண்டனை அதிகமாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான்செய்த செயலுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
கடந்த இரவில் நான் செய்த செயலுக்கு எந்தவிதமான சாக்குப்போக்கும் தெரிவிக்க முடியாது. நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இரண்டாம் பாதியில் இருந்து நாங்கள் சிறப்பாக விளையாடத் தொடங்கினோம்.
111-ஆவது நிமிஷத்திற்குப் பிறகு என்னால் எனது அணிக்கு உதவ முடியவில்லை. போட்டி முடியும் முன்பு நான் தவறு செய்துவிட்டேன்.
நடுவர், சங்கடப்படுத்திய மற்ற அனைவர்களுக்கும் நான் மீண்டும் எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.