விளையாட்டுத் துளிகள்..!
சூப்பர் கோப்பை கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 1-0 கோல் கணக்கில் இன்டர் காசி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, அரையிறுதியில் இடம் பிடித்தது.
தில்லியில் நடைபெற்ற ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப்பில் இந்தியா 83 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியது. மொத்தம் 21 நாடுகள் இந்தப் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
எஃப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் கிரிஸ்டல் பேலஸ் 3-0 கோல் கணக்கில் ஆஸ்டன் வில்லாவை சாய்த்து, 3-ஆவது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக எபெரெச்சி எùஸ (31'), இஸ்மாய்லா சார் (58', 90+4'), ஆகியோர் ஸ்கோர் செய்தனர்.
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியர்கள் 14 பேர், தங்களது பிரிவில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.