சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
பிரியன்ஷ் ஆர்யாவுக்கு முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!
பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரியன்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.
இதையும் படிக்க: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை... சாதனை நிகழ்த்துவாரா ரோஹித் சர்மா?
இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 201 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா இருவரும் அரைசதம் விளாசி அசத்தினர். பிரப்சிம்ரன் சிங் 83 ரன்களும், பிரியன்ஷ் ஆர்யா 69 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பிரியன்ஷ் ஆர்யாவுக்கு பாராட்டு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரியன்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் வீரர்களின் ஒருவரான பிரியன்ஷ் ஆர்யா சிறப்பாக விளையாடினார். அவர் அதிரடியான ஆட்டத்தை தொடர வேண்டும். அவர் அனைத்து பந்துகளையும் அடித்து விளையாட நினைக்கவில்லை. எதிரணி நன்றாக பந்துவீசியபோது, அதற்கேற்ப அவரது ஆட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தார். இது போன்ற அனுபவங்கள் அவரை மேலும் சிறப்பான வீரராக மாற்றும். அவர் மிகவும் அற்புதமான வீரர் என்றார்.
இதையும் படிக்க: முத்தரப்பு கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிரணி அபார வெற்றி!
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள பிரியன்ஷ் ஆர்யா 323 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்துள்ளவர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.