விவாகரத்தானவர்கள் ஃபாலோ செய்ய வேண்டிய `ஷேர்டு பேரன்டிங்' ஏன் அவசியம்?
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஏப். 26 - 27 நள்ளிரவில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்தியது. டுட்மாரி கலி மற்றும் ராம்பூர் மண்டலங்களின் அருகே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் இந்த தாக்குதல்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல்கள் நடத்தி எதிர்வினையாற்றியிருப்பதாக ராணுவம் இன்று(ஏப். 27) வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளது.