செய்திகள் :

2 பந்துகளில் 2 சிக்ஸர்கள்... ஆனாலும் சாதனையை தவறவிட்ட ரோஹித் சர்மா!

post image

அதிரடியாக தொடங்கிய ரோஹித் சர்மா புதிய சாதனையை நிகழ்த்த தவறவிட்டார்.

வான்கடே திடலில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தப்போட்டியில் ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைய நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மயங்க் யாதவ் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த ரோஹித் சர்மா அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்காமல் டாட் செய்தார். 5ஆவது பந்தில் மெதுவாக வீசப்பட்ட பந்தில் ஆட்டமிழந்தார்.

5 சிக்ஸர்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்டார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் ஜெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோஹித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள்

1.கிறிஸ் கெயில் - 357 சிக்ஸர்கள் (மே.இ.தீ.வீரர்)

2. ரோஹித் சர்மா - 297 சிக்ஸர்கள் (இந்தியர்)

3. விராட் கோலி - 285 சிக்ஸர்கள் (இந்தியர்)

4. எம்.எஸ்.தோனி - 260 சிக்ஸர்கள் (இந்தியர்)

5. ஏபிடி வில்லியர்ஸ் - 251 சிக்ஸர்கள் (தெ.ஆ.வீரர்)

விராட் கோலி, க்ருணால் பாண்டியா அசத்தல்: ஆர்சிபிக்கு 7-வது வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட்டின் 46-ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது. முதலில் டெல்லி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு... மேலும் பார்க்க

ஆர்சிபிக்கு 163 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தில்லி கேபிடல்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்ல... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 4,000 ரன்களைக் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை!

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 4000 ரன்களைக் கடந்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜ... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் போல்ட் அசத்தல் பந்துவீச்சு; மும்பை அபார வெற்றி!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்று... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; பிளேயிங் லெவனில் டு பிளெஸ்ஸி!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

பிரியன்ஷ் ஆர்யாவுக்கு முன்னாள் இந்திய வீரர் பாராட்டு!

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பிரியன்ஷ் ஆர்யாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற... மேலும் பார்க்க