சுரண்டை நகராட்சியில் நெகிழி சேகரிப்பு இயக்கம்
சுரண்டை நகராட்சியில் தூய்மை பணியாளா்களால் நெகிழி சேகரிப்பு இயக்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் தலைமை வகித்து பேரணியைத் தொடக்கிவைத்தாா். இதையடுத்து நகா் முழுவதும் தேங்கிக் கிடந்த 300 கிலோ நெகிழி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.