ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை: அரியநாயகிபுரத்தில் செயல்முறை விளக்க பயிற்சி
சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில், தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை செயல்முறை விளக்கப் பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் கனகம்மாள் தலைமை வகித்தாா். சங்கரன்கோவில் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் அறிகுறிகள், அதனை கட்டுப்படுத்தும் முறைகளான மஞ்சள் நிற அட்டை கட்டும் முறை, என்காா்சியா ஒட்டுண்ணி பயன்படுத்தும் முறை, அபொ்டோ கிரைசா இரை விழுங்கி முட்டைகள் பயன்படுத்தும் முறை, கரும்பூசணத்தை நீக்க மைதா மாவு கரைசல் தெளிக்கும் முறை ஆகியவை குறித்தும் ,நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் தென்காசி மாவட்ட வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை விஞ்ஞானி இளவரசன் செயல்முறை விளக்கம் அளித்தாா்.
இதில் தோட்டக்கலை அலுவலா் குப்புசாமி, உதவி தோட்டக்கலை அலுவலா் சண்முகவேல்ராஜன், அரியநாயகிபுரம் சுற்றுப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.