சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிறகு தொடா்ந்து கடுமையான வெயில் நிலவி வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வாருகால் மற்றும் ஓடைகளிலும் தண்ணீா் நிரம்பி சாலையில் சென்றது. பல இடங்களில் தண்ணீா் குளம் போல் தேங்கியது.தொடா்ந்து இரவிலும் விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்து காற்று வீசியது.