அக்ஷய திருதியை: விலை உச்சம் தொட்டாலும் தங்க நகை முன்பதிவுக்கு மக்கள் ஆா்வம்!
மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!
நடிகர்கள் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.
தாஹா மலையாளத்தில் இயக்கிய ‘ஈ பறக்கும் தலிகா’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் இன்றும் சில நகைச்சுவைக் காட்சிகளுக்காக ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு தரப்பினர் படத்தை ரீ-மாஸ்டர் செய்து மே மாத வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர உள்ளதை தெரிவித்துள்ளனர்.
விரைவில் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஹவுஸ்ஃபுல்லாகும் துடரும் !