தில்லி குருத்வாரா: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஒருவா் கைத...
ஹவுஸ்ஃபுல்லாகும் துடரும் !
நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படம் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
இதற்கிடையே, ’சவுதி வெள்ளக்கா' பட இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா இருவரும் இணைந்து நடித்த ’துடரும்’ படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்தது.
கார் ஓட்டுநரான மோகன்லால் தன் மனைவி குழந்தைகளுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். இந்தச் சூழலில் நாயகன் எதிர்கொள்ளும் பிரச்னையும் அதன் தீர்வுகளுமாக உருவான இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
குடும்பப் பின்னணியில் எமோஷனல் கதையைப் பேசிய இப்படம் மோகன்லாலின் நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கேரளத்தில் பல திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இதுவரை ரூ. 40 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நினைவில் காடுள்ள மிருகம்! மோகன்லாலின் துடரும் - திரை விமர்சனம்!