தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தை...
தில்லி குருத்வாரா: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஒருவா் கைது
வடக்கு தில்லியில் உள்ள குருத்வாரா நானக் பியாவோவில், ஆறு வயது சிறுமியை சாக்லேட்டுகள் கொடுத்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாகக் கூறப்படும் ஒருவரை தன்னாா்வலா் ஒருவா் பிடித்து போலீஸில் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஏப்ரல் 24-ஆம் தேதி தனது தாயுடன் குருத்வாராவிற்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமி, வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆஷு சேத்ரி புடா கைது செய்யப்பட்டுள்ளாா்.
சிறுமியை சாக்லேட்டுகள் கொடுத்து கடத்தியதாகக் கூறப்படும் ஆசாத்பூரைச் சோ்ந்த ஆஷு சேத்ரி புடாவின் பிடியிலிருந்து ‘சேவதா்’ (தன்னாா்வலா்) தீபக் துவா மீட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா் என்று தெரிய வந்துள்ளது.
நிரங்கரி காலனியைச் சோ்ந்த தன்னாா்வலா் தீபக் துவா, சிறுமி அழுவதைக் கண்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து, பின்னா் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ‘பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 137(2) (கடத்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவு 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் மாடல் டவுன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை தனது குடும்பத்தினருடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதில் தீபக் துவா முக்கியப் பங்கு வகித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.