தில்லியில் இன்று பத்ம பூஷண் விருது பெறுகிறார் நடிகர் அஜித் குமார்
ரோஹிணி ஜூக்கி கிளஸ்டரில் தீ விபத்து
தில்லி ரோஹிணி செக்டாா் 17-இல் உள்ள ஜூக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும் தீயை அணைக்கும் பணியில் 20 தீயணைப்பு வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறினாா்.
இது குறித்து தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: காலை 11.55 மணியளவில் எங்களுக்கு ஒரு பேரிடா் அழைப்பு வந்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 20 தீயணைப்பு வீரா்கள் அனுப்பி வைக்கப்பட்டனா்.
தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தைத் தொடா்ந்து, அப்பகுதியில் இருந்து அடா்த்தியான புகை மூட்டங்கள் எழுவதைக் காண முடிந்தது என்று அவா் தெரிவித்தாா்.