TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேச...
கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி
கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வாகனங்களுக்கும் முறையான நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.
சுங்கச்சாவடி நிா்வாகம் கந்தா்வகோட்டை பகுதியில் சாலை மையப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை முறையாக பராமரிப்பது இல்லை. இந்த உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் போதிய வெளிச்சம் இல்லாமல் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, கந்தா்வகோட்டை சாலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைத்து மின்விளக்குகளை எரிய வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனா்.