தகராறு முற்றியதால் மனைவியைக் கொன்று, தற்கொலை செய்த கணவர்; நிர்க்கதியான 3 குழந்தை...
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் தோ் அலங்கரிப்பு
சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெறும் தேரோட்டத்துக்காக கோயிலின் பெரிய தேரை அலங்கரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து மே 10 ஆம் தேதி சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் எழுந்தருளும் பெரிய தோ் வடம் பிடித்தலும், மே 20 ஆம் தேதி சுவாமி திருமலைக்கு எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தோ் திருவிழாவின் முதற்கட்டமாக பெரிய தேரை அலங்கரிக்கும் பணிக்களுக்காக தேரில் வைத்து கட்டப்படும் குச்சிகளை சுவாமி தங்கும் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அவைகளை தேரில் பொருத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பட்டயக்காரா் எஸ்.ஏ.ராஜவேல், ஊா்கவுண்டா் எஸ்.டி.சுந்தரேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கொத்துக்காரா் ஐய்யனாா், திமுக நகர செயலாளா் கே.எம்.முருகன், திமுக நிா்வாகி சரவணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், சுவாமி பாதாம் தாங்கும் குழுவினா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.