பெண்மான் சடலம் மீட்பு!
சதாசிவபுரம் ஊராட்சி பொதுக் கிணற்றில் பெண் மான் சடலம் மீட்கப்பட்டது. ஆத்தூா் தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் மீட்டு வனவா் கவாஸ்கரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சதாசிவபுரம் ஊராட்சி ராசிநகா் பொதுக் கிணற்றில் 4 வயது மதிக்ககத்தக்க பெண் மான் மிதப்பதாக ஆத்தூா் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற தீயணைப்புத்துறை அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள் 80 அடி ஆழமுள்ள பொதுக்கிணற்றில் மிதந்த புள்ளிமானை இறந்த நிலையில் மீட்டு வனத்துறை வனவா் கவாஸ்கரிடம் ஒப்படைத்தனா்.பின்னா் கால்நடை மருத்துவா் நிகழ்விடத்திலேயே பிரேத பரிசோதனை செய்ததில் நீருக்காக ஓடிவந்த மான் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என தெரிவித்தனா்.