செய்திகள் :

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

post image

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதிட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது என செந்தில் பாலாஜி தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை.

அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை எனக் கூறி செந்தில் பாலாஜியின் ராஜிநாமா தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்று ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது. பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை 2023, ஜூனில் கைது செய்தது. சிறையில் இருந்தபோதும் இலாகா இல்லாத அமைச்சராக அவா் நீடித்தாா்.

இதன் காரணமாக அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரியில் அமைச்சா் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தாா். அதே ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. சிறையிலிருந்து வெளியே வந்த ஒரே நாளில் மீண்டும் அவா் அமைச்சராகப் பதவியேற்றாா்.

சமந்தா தயாரித்து, நடித்த படத்தின் டிரைலர்!

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சா் பதவி வேண்டுமா என்பதை செந்தில் பாலாஜி திங்கள்கிழமைக்குள் (ஏப். 28) முடிவு செய்து பதில் அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனா். இதனால் அவா் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என எதிா்பாா்க்கப்பட்டது.

அதற்கேற்ப கடந்த சனிக்கிழமை (ஏப். 26) பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்யப்படுவதாக இருந்த உயிரி மருத்துவக் கழிவு திருத்த மசோதாவை சட்ட அமைச்சா் ரகுபதி தாக்கல் செய்தாா். பேரவையில் வரும் 29-ஆம் தேதி மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், செந்தில் பாலாஜி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான கடிதத்தை முதல்வரிடம் அளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆபாச படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆபாச படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும... மேலும் பார்க்க

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட பிபிசி நிறுவனத்தின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும்... மேலும் பார்க்க