செய்திகள் :

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

post image

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது.

சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் கேதார்நாத் கோயில் மே 2-ஆம் தேதி அக்ஷ்ய திதியன்று திறக்கப்பட உள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வந்து ஈசனைத் தரிசித்துச் செல்கின்றனர்.

இமயமலைத் தொடரில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள ஆறு மாதங்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். மே 2-ஆம் தேதி காலை 5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் குழுத் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இமயமலையில் உள்ள கேதார்நாத் ஆலயத்திற்காக இன்று உகிமத்தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சிவன் சிலை கேதார்நாத்துக்குப் புறப்பட்டுச் சென்றது.

கேதார்நாத் கோயிலின் நடை திறக்கப்படுவதற்கு முன்னதாக செய்யப்படும் அவசியமான சடங்கு இதுவாகும். உகிமத்திலிருந்து எடுத்துவரப்பட்ட சிவன் சிலை பஞ்சமுகி டோலி என்ற பல்லக்கில் பக்தி பாடல்கள் இசைக்கக் கோயிலின் தலைமை அர்ச்சகர்கள், கோயில் குழுவின் நிர்வாகிகள் தோளில் சுமந்துசென்று ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

குப்தகாசி, ஃபாட்டா, கௌரிகுண்டில் இரவு தங்கி மே 1-ஆம் தேதி கேதார்நாத்தை வந்தடையும் என்று பத்ரி-கேதார் நிர்வாகக் குழு பொறுப்பாளர் ஹரிஷ் கௌர் தெரிவித்தார். அதன்பிறகு மே 2ஆம் தேதி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ளப்படும். அதன்பிறகு 7 மணியளவில் பக்தர்கள் தரிசனத்துக்காகக் கோயில் நடை திறக்கப்படும்.

கேதார்நாத் கோயில் திறப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு சார் தாம் யாத்திரை தொடங்கியது முதல் ஒரு மாதத்திற்கு விஐபி, விவிஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, சார் தாம் யாத்திரைக்கு 48 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். இந்தாண்டு 60 லட்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேதார்நாத் கோயிலின் புனிதத்தன்மையைப் பேணுவதற்காகக் கோயிலின் 30 மீட்டர் சுற்றளவில் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு முடித்து வைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சமூக ஊடகங்களில் வைரலான செய்யறிவு(ஏஐ) புகைப்படங்கள்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வைரலான சில புகைப்படங்கள் செய்யறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க

ஆபாச படங்கள்: ஓடிடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

ஆபாச படங்கள், இணையத் தொடர்களை ஓடிடியில் வெளியிடுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி நிறுவனங்கள், மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும... மேலும் பார்க்க

அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்ட பிபிசி நிறுவனத்தின் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனமும்... மேலும் பார்க்க