அசாமில் காங்கிரஸ் எம்.பி. வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
அசாமில் காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் வாகனம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலம், நாகோன் மாவட்டத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் மற்றும் அவருடன் சென்ற இரண்டு பேர் மீது மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்கினர்.
இந்த சம்பவத்தில் அவர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தாலும், வாகனம் மோசமாக சேதமடைந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் அருகிலுள்ள சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெற்றனர். இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் குற்றஞ்சாட்டினார்.
பயங்கரவாதிகளை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட பிபிசி: வெளியுறவு அமைச்சகம் எதிர்ப்பு!
இது எங்களைக் கொலை செய்ய நடந்த ஒரு சதி, ஆனால் நாங்கள் பயப்பட மாட்டோம் என்று போர்டோலோய் மேலும் கூறினார்.
இந்த ஆண்டு அசாமில் காங்கிரஸ் எம்.பி. மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக பிப்ரவரியில், துப்ரி எம்.பி. ரகிபுல் உசேன் அதே நாகோன் மாவட்டத்தில் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.