பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் எழுந்திருக்கும் நிலையில், பாகிஸ்தானை நான்காக உடைக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாட்டிலிருந்து பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்தியா உத்தரவிட்டு, அவர்களது விசாக்களையும் ரத்து செய்தது.
தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்பிருப்பதாகக் கருதப்படும் பயங்கரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுப்ரமணியன் சுவாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைத்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, பாகிஸ்தானை உடைப்பதே இந்தியாவுக்கு நீண்ட கால தீர்வாகும். அதாவது பலுசிஸ்தான், சிந்து, பாக்துனிஸ்தான் மற்றும் எஞ்சிய மேற்கு பஞ்சாப் என பாகிஸ்தானை நன்காக உடைக்க வேண்டும். இந்த நான்கையும் சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்க வேண்டும்.
இந்தியாவுக்கு பாகிஸ்தானுடன் நிலையான அமைதியை பெற என்ன வழிகள் இருக்கினற்ன. தற்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாப், பலுசிஸ்தான், சிந்து, பஷ்தூனிஸ்தான் போன்ற பகுதிகள் கிளர்ச்சியில் உள்ளன. இந்தியா எதிர்கொள்ள வேண்டியது எஞ்சிய பாகிஸ்தானையே. எனவே, ஒரே வழி, அந்த எஞ்சிய பாகிஸ்தானை இந்தியா முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதே என்று தெரிவித்துள்ளார்.