செய்திகள் :

`ஆடி காரில் பால் வியாபாரம்' - ஹரியானாவை ஆச்சர்யத்தில் வியக்க வைத்த இளைஞன்

post image

பிடித்த வேலையை செய்வதற்காக சிலர் அதிக சம்பளத்தில் இருக்கும் வேலையை கூட ராஜினாமா செய்வதுண்டு. அப்படித்தான் ஹரியானாவில் வாலிபர் ஒருவர் தனக்கு பிடித்த வேலையை செய்யவேண்டும் என்பதற்காக வங்கி வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஹரியானா மாநிலம் மொகதாபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த அமித் பதனா என்பவர் வங்கியில் நிரந்தர சம்பளத்தில் இருந்தார். அவரது குடும்பம் பால் வியாபாரம் செய்யக்கூடியது. எனவே அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று பால் வியாபாரம் செய்து வந்தார். அமித்திற்கு வாகனங்கள் என்றால் மிகவும் விருப்பம். குடும்பத் தொழிலையும் கைவிட விருப்பமில்லை. எனவே அமித் தனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர பால் வியாபாரியாக மாறிவிட்டார். வாகனங்கள் மீது தனக்கு இருக்கும் பிரியத்தை பால் வியாபாரத்தில் கலந்துவிட்டார்.

அதாவது பால் வியாபாரத்திற்காக சொந்தமாக கார் ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார். அதுவும் சாதாரண கார் கிடையாது. ஆடி கார் வாங்கி அதில் சென்று பால் சப்ளை செய்து வருகிறார். அமித்திற்கு வாகனங்கள் மீது இருந்த பிரியம் காரணமாக முதலில் ஹார்லே டேவிட்சன் பைக் ஒன்றை வாங்கி அதில் பால் வியாபாரம் செய்து வந்தார். டேவிட்சன் பைக்கில் சென்று அமித் பால் சப்ளை செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. வியாபாரம் நாளுக்கு நாள் அதிகரித்தது. பால் டெலிவரி செய்யும் இடமும் அதிகரித்தது. இதையடுத்தே பால் டெலிவரி செய்ய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை விலைக்கு வாங்கினார்.

இது குறித்து அமித் கூறுகையில்,''கார் ஓட்டுவது எனது பொழுதுபோக்கு, எனது ஆர்வத்தை என்னால் விட்டுவிட முடியாது. இப்போது நான் எனது ஆர்வத்தை குடும்பத் தொழிலுடன் இணைத்துவிட்டேன், இதன் காரணமாக நான் சம்பாதிக்கிறேன், எனது பொழுதுபோக்கும் நிறைவேறி வருகிறது. பால் விற்பனை செய்வதற்காக வெட்கப்படவில்லை. எனது குடும்பத்தினரும் எனக்கு உதவியாக இருக்கின்றனர்"என்று அவர் கூறினார். அமித்திடம் கடந்த 13 வருடங்களாக பால் வாங்கும் வாடிக்கையாளர் ஒருவர் இது குறித்து கூறுகையில், "முதலில் பால் சப்ளை செய்ததற்கும், இப்போது பால் சப்ளை செய்வதற்கும் ஒரு வித்யாசம்தான் இருக்கிறது. முதலில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பைக்கில் வந்து பால் சப்ளை செய்தார். இப்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான காரில் வந்து பால் சப்ளை செய்கிறார்'' என்றார். தினமும் 120 லிட்டர் பால் சப்ளை செய்கிறார்

காேவை: `வாடிவாசல் வீரர்கள்' - அசரடித்த ஜல்லிக்கட்டு போட்டி

கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்ட... மேலும் பார்க்க

"எக்ஸ்ட்ரா பன்னீர் தரமாட்டீங்களா?" - மண்டபத்திற்குள் பஸ்ஸை விட்டு ஏற்றியவர் கைது; பின்னணி என்ன?

உத்தரப் பிரதேசத்தில் திருமண சாப்பாட்டில் போதிய அளவு பன்னீர் கொடுக்கவில்லை என்பதற்காக ஒருவர் செய்த காரியத்தால் திருமண மண்டபமே ரத்தக்களரியாகிவிட்டது.உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள ஹமித்... மேலும் பார்க்க

Titanic: மூழ்கும் முன் டைட்டானிக் குறித்து எழுதப்பட்ட கடிதம் ரூ.3 கோடிக்கு ஏலம்; எப்படி கிடைத்தது?

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் 3 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட சொகுசு கப்பல் என்றாலே "டைட்டானிக் கப்பல்" தான் நினைவிற்கு... மேலும் பார்க்க

அவசரத்திற்குக் கழிப்பறை பயன்படுத்திய முதியவர்; ரூ.800 வசூலித்த ஹோட்டல்; வைரல் பதிவின் பின்னணி என்ன?

ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வயதான பெண்மணி, வெறும் ஆறு நிமிடங்கள் கழிப்பறை பயன்படுத்துவதற்காக ரூபாய் 805 வசூலித்த சம்பவம் இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.ராஜஸ்தானில் உள்ள ... மேலும் பார்க்க

`மியான்மரில் மீண்டும் அது நடக்கும்..!’ - மக்களை பீதியடைய செய்த ஜோதிடர் கைது

மியான்மரில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், மீண்டும் இதே போன்று மற்றொரு நிலநடுக்கம் ஏற்படும் என்று கூறி மக்களை பீதியடைய செய்ததாக ஜோதிடர் ஒருவர் கைது செ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச் சடங்கு; வாடிக்கனுக்கு வெளியே நல்லடக்கம் - முழுத் தகவல்

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு இன்று காலைதொடங்கி நடைபெற்றுவருகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி தனது 88 ஆவது வயதில் மறைந்தார். இவர் கடந்த சில மாதங்களாக ... மேலும் பார்க்க