அவசரத்திற்குக் கழிப்பறை பயன்படுத்திய முதியவர்; ரூ.800 வசூலித்த ஹோட்டல்; வைரல் பதிவின் பின்னணி என்ன?
ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், வயதான பெண்மணி, வெறும் ஆறு நிமிடங்கள் கழிப்பறை பயன்படுத்துவதற்காக ரூபாய் 805 வசூலித்த சம்பவம் இணையவாசிகளைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்கு ஒரு குடும்பம் தரிசனத்திற்காகச் சென்றுள்ளனர். தரிசனம் செய்யக் காத்திருந்தபோது வயதான பெண்மணிக்குக் கடுமையான வயிறு வலியும், குமட்டலும் ஏற்பட்டுள்ளது. அவர் நிற்கவே சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஒரு கழிப்பறையைத் தேடி உள்ளனர். ஆனால் அருகில் பொது குளியல் பகுதிகள் இருந்த போதிலும் சரியான கழிப்பறை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி அருகிலிருந்த ஒரு ஹோட்டலை அணுகி உள்ளனர்.

வயதான பெண்ணின் நிலையைப் பார்த்தும், ஹோட்டல் வரவேற்பாளர் கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு 800 ரூபாய் கேட்டுள்ளார்.
இது குறித்த லிங்கின் பதிவு வைரலானது. அந்தப் பதிவில் அன்று நடந்த விவரங்கள் குறித்து எழுதப்பட்டிருந்தன.
”நாங்கள் தரிசனத்திற்காகக் காத்திருந்தபோது என் அம்மாவிற்குத் திடீரென உடல்நிலை மோசமானது. குமட்டலும், வயிறு வலியும் ஏற்பட்டது. அருகில் கழிப்பறையைத் தேடினோம் பொது குளியலறை இருந்தன.
அவரால் நிற்கக் கூட முடியவில்லை. இதனால் அருகில் உள்ள ஹோட்டலுக்கு விரைந்து சென்று அங்கு இருக்கும் நபரிடம் கேட்டபோது கழிப்பறை மட்டும் பயன்படுத்துவதற்கு 805 ரூபாய் கேட்டார்.
ஒரு பெண் வலியில் இருப்பதைப் பார்த்துவிட்டு, அடிப்படை மனித நேயம் இல்லாமல் விலை கேட்டார்கள்... 805 ரூபாய் செலுத்தி அம்மா அந்த கழிப்பறையைப் பயன்படுத்தினார்” என்றார்.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடும் ஒரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக அவர்கள் பதிவிட்டது இணையத்தில் வைரலானது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs