China: அழகைக் கூட்ட 100 அறுவை சிகிச்சை; சீன பெண் செலவளித்த தொகை எவ்வளவு தெரியுமா?
சீனாவைச் சேர்ந்த இளம் பெண், தன்னை அழகாக காண்பித்துக் கொள்ள 100க்கும் மேலான அறுவை சிகிச்சைகளைச் செய்து கொண்டுள்ளார்.
சாதாரணமாகவே பெண்கள் தங்களை அழகாக காண்பித்துக் கொள்ள பல விஷயங்களைச் செய்கின்றனர்.
கிராமப்புறங்கள், நகரப்புறங்கள் என எல்லா இடங்களிலும் பியூட்டி சலூன்கள் வந்துவிட்டன. புருவத்தைத் திரெட்டிங் செய்வது முதல் ஹேர் ஸ்ட்ரைட்னிங் செய்வது வரை சாதாரணமாவே இவற்றைப் பெண்கள் செய்து கொள்கின்றனர்.
இன்னும் கூடுதலாக காசு செலவு செய்து பேசியல் போன்ற விஷயங்களைச் செய்து கொள்கின்றனர். அடுத்தபடியாக சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
நடிகைகளிடம் பிரபலமாக இருந்த இந்த அழகுசார் அறுவை சிகிச்சையை இப்போது அனைவரும் செய்து கொள்கின்றனர்.

அந்த வகையில் சீனாவைச் சேர்ந்த அப்பி வு என்ற இளம் பெண் கடந்த 20 வருடங்களில் 100க்கும் மேற்பட்ட அழகுசார் அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளார்.
இன்னும் அழகாக மாற்றுவதற்கான முயற்சியில் எப்போதும் நிறுத்தப்போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
அப்பி தனது 14 வது வயதில் ஒரு ஹார்மோன் சிகிச்சை பெற்ற பிறகு, அவரின் எடை இரண்டு மாதங்களில் 42 இல் இருந்து 62 ஆக அதிகரித்திருக்கிறது.
இவரின் உடம்பில் உள்ள கொழுப்பை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ள அவரைத் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வரவிருக்கும் அறுவை சிகிச்சை பற்றி பதட்டமாக இருந்த அப்பிக்கு அவரது தாயார் சொன்ன வார்த்தை ஆறுதலாக இருந்துள்ளது. "தைரியமாக உள்ளே செல், நீ வெளியே வரும்போது அழகாய் மாறிவிடுவாய்" என்று கூறியிருக்கிறார்.
இப்போது அவருக்கு 35 வயதாகிறது. இதுவரை அழகு சிகிச்சைக்காக மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (கிட்டதட்ட 4 கோடி ரூபாய்) வரை செலவு செய்துள்ளார் அப்பி.
அவரின் மூக்கு அழகுசார் அறுவை சிகிச்சையின் போது சில தவறுகள் ஏற்பட்டு, மூக்கை இழக்கு நிலைக்குச் சென்று.
அதன்பின் சரிசெய்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து அழகான அறுவை சிகிச்சைகளைச் செய்துவந்துள்ளார் அப்பி.
100க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்ட இந்த இளம் பெண், இன்னும் அழகாக மாறுவதற்கான முயற்சியைத் தான் ஒருபோதும் நிறுத்தப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
மார்க்கெட்டிங் ஆராய்ச்சி நிறுவனமான IResearch அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, சீனாவில் 80 ஆயிரம் இடங்கள் உரிமம் இல்லாமல் அழகு சாதன நடைமுறைகளை வழங்குகின்றன.
மேலும், ஒரு லட்சம் அழகு சாதன நிபுணர்கள் சரியான தகுதி இல்லாமல் பணிபுரிகின்றனர். இதன் விளைவாக சீனா அழகு சாதன அறுவை சிகிச்சை மருத்துவமனைக்குள் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விபத்துக்கள் நடப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs