செய்திகள் :

CSK vs SRH : 'நாங்கள் 200% மோசமாகத்தான் ஆடியிருக்கிறோம்!' - டாஸில் தோனி பேச்சு!

post image

'சென்னை vs ஹைதராபாத்!'

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் டாஸை வென்று முதலில் பந்து வீசுகிறது.

CSK vs SRH
CSK vs SRH

'தோனி பேசியவை!'

டாஸூக்கு பின் தோனி பேசுகையில், 'நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். ஏனெனில், நேற்று இங்கே பயிற்சி செய்தோம். காற்றில் ஈரப்பதத்தின் தாக்கம் இருந்தது. அதனால் முதலில் பந்துவீசுவதுதான் சரியாக இருந்திருக்கும். நாங்கள் 200% சரியாக ஆடவில்லை என்பதை முழுமையாக ஒத்துக்கொள்கிறேன்.

பேட்டிங், பௌலிங், பீல்டிங் என எதிலுமே நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாம் நம்முடைய பணியை சரியாக செய்யாவிடில் மற்ற வீரர்களின் மீது அழுத்தம் ஏறும். 6 போட்டிகளை பற்றியும் யோசிக்காமல் ஒவ்வொரு போட்டியாக அணுக வேண்டும். ரிசல்ட்டை பற்றி யோசிக்காமல் ப்ராசஸை அனுபவித்து மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.

Dhoni
Dhoni

எஞ்சிய போட்டிகளில் இதையே செய்ய நினைக்கிறோம். 2010 க்கு முன்பாக இங்கிருந்த பிட்ச் சிறப்பாக இருந்தது. இப்போதும் மைதான பணியாளர்கள் சிறப்பான பிட்ச்சை கொடுக்கவே பணிபுரிகிறார்கள்.

Dhoni - Pat Cummins
Dhoni - Pat Cummins

ஆனால், அந்த செம்மண் விக்கெட்தான் சிறந்தது. இன்று எங்கள் அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. ரச்சினுக்கு பதில் ப்ரெவிஸூம் விஜய் சங்கருக்கு பதில் தீபக் ஹூடாவும் வருகிறார்கள்.' என்றார்.

Neeraj Chopra : 'என்னுடைய தேசப்பற்றை கேள்வி கேட்பது வேதனையாக இருக்கிறது!' - நீரஜ் சோப்ரா

'நீரஜ் அறிக்கை!'பஹல்காம் தாக்குதலை முன்வைத்து, 'என்னுடைய தேசப்பற்றை கேள்விக்குள்ளாக்குவது வேதனையாக இருக்கிறது.' என நீரஜ் சோப்ரா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.Neeraj Chopra'பாகிஸ்தான் வீரருக்கு ... மேலும் பார்க்க

Virat Kohli: 'அந்த ஒரு விஷயத்தை மட்டும் கரெக்டா பண்ணுங்கன்னு சொன்னேன்'- சின்னசாமி வெற்றி பற்றி கோலி

'பெங்களூரு vs ராஜஸ்தான்!'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியை பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்... மேலும் பார்க்க

RCB vs RR : 10 பந்துகளில் போட்டியை மாற்றிய ஹேசல்வுட்; சின்னசாமியில் எப்படி வென்றது பெங்களூரு?

'பெங்களூரு vs ராஜஸ்தான்!'ராஜஸ்தான் அணி மீண்டும் கையிலிருந்த ஒரு போட்டியை கோட்டைவிட்டு தோற்றிருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் வெற்றிபெற முடியாமல் தவித்து வந்த பெங்களூரு அணி, ஹேசல்வுட்டின் மிரட்டலான டெத... மேலும் பார்க்க

Ishan Kishan : 'இஷன் கிஷன் செய்தது மடத்தனம்..!' - ஏன் தெரியுமா?

'ஹைதராபாத் vs மும்பை!'சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இஷன் கிஷன் அவுட் ஆன விதம்தான் சமூகவலைதளங்களில் இன்னமும் பரபரப்பாக ... மேலும் பார்க்க