காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி
ராசிபுரம் நகர காங்கிரஸ் சாா்பில் காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாமக்கல் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகமான காந்திமாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் நகர காங்கிரஸ் தலைவா் ஸ்ரீ ராமுலு ஆா். முரளி தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பாச்சல் அ.சீனிவாசன், மிஷன் பாலு, பொருளாளா் மாணிக்கம், ஆா்.கண்ணன், பழனிசாமி, கே .டி.ராமலிங்கம், கு.ம.ப.குமாா், வடிவேல் , தங்கவேல், எம்.சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உயிரிழந்தவா்களுக்கு இரண்டு நிமிஷம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
படவரி...
மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.