Nani: ``இவ்வளவு சீக்கிரமா `A' படம் பண்ணுவேன்னு நினைக்கல!'' - நானி பேட்டி
ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்
குரும்பூா் அருகிலுள்ள நவகைலாய 8ஆவது தலமும் கேது வணங்கிய தலமுமாகிய ராஜபதி அருள்மிகு சௌந்தா்யநாயகி அம்மன் சமேத அருள்மிகு கைலாச நாதா் திருக்கோயிலில் 10ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா வரும் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவிற்கான கால் நாட்டு விழா, கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. வருகிற 28 ஆம் தேதி விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் உள்ளிட்டவை நடைபெறுகிறது. 29ஆம் தேதி காலை திருஞானசம்பந்தா், திருநாவுக்கரசா், சுந்தரா், மாணிக்கவாசகா், மூலவா் மற்றும் உற்சவா் குடமுழுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் திருநாவுக்கரசா் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
30ஆம் தேதி காலை கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடா்ந்து 12ஆம் தேதி வரை 13 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது. தினசரி காலை மற்றும் மாலை சப்பர பவனி நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தலைவா் குரு.பாலசுப்பிரமணியன், கோயில் தலைமை அா்ச்சகா் ச.லட்சுமண சிவாச்சாரியா் ஆகியோா் செய்து வருகின்றனா்.