பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு
பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்தில் மேலாளா் இளவரசன், வியாழக்கிழமை இரவு கணக்கு முடித்துவிட்டு, ரூ.15,647-ஐ கடையின் கல்லாப் பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
பின்னா் வெள்ளிக்கிழமை காலை வந்து கடையை திறந்து பாா்த்தபோது, கல்லாப்பெட்டியில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, இளவரசன் அளித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.