செய்திகள் :

ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்... தோல்விக்குப் பிறகு தோனி ஆதங்கம்!

post image

சன்ரைசர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கேவின் தோல்வியைத் தொடர்ந்து தோனி ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம் ஆனால் பலரும் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம் எனக் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் உடனான போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை 19.5 ஓவா்களில் 154 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஹைதராபாத் 18.4 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் தோற்றது. சொந்த மண்ணில் இது சென்னைக்கு 4-ஆவது தோல்வியாகும்.

இது குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் பேசியதாவது:

டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார்

முதல் இன்னிங்ஸில் நாங்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்துகொண்டே இருந்தோம். பிட்ச் நன்றாக இருந்தது. 155 ரன்கள் போதுமானதாக இல்லை. ஏனெனில் பிட்சில் பெரிதாக பந்து திரும்பவில்லை.

உண்மைதான், 8-10ஆவது ஓவர்களுக்குப் பிறகு பிட்ச் இரண்டு விதமாக செயல்பட ஆரம்பித்தது. ஆனால், பெரிதாக வித்தியாசமாக இல்லை.

எங்களது சுழல்பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் சிறப்பாக பந்துவீசினார்கள். கூடுதலாக 15-20 ரன்கள் அடித்திருக்கலாம்.

சுழல்பந்து வீச்சாளர்கள் வரும் தடுமாறி இருந்தோம். டெவால்டு ப்ரீவிஸ் சிறப்பாக விளையாடினார். அவர் விளையாடியது போலத்தான் மிடில் ஆர்டரில் எங்களுக்கு தேவைப்பட்டது.

ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைக்கலாம், ஆனால்...

ஒன்று நீங்கள் அடிக்க வேண்டும் அல்லது பார்ட்னர்ஷிப்பாவது அமைக்க வேண்டும். உங்களுக்கு சௌகரியமான இடங்களில் பெரிய ஷாட்டுகள் அடிக்கடி அடிக்க வேண்டும்.

இந்த மாதிரி தொடர்களில் ஒன்றிரண்டு ஓட்டைகளை அடைப்பது மாதிரி இருந்தால் நல்லது. ஆனால், பெரும்பாலான வீரர்கள் சரியாக விளையாடமல் இருந்தால் கடினம்.

அதிகமான வாய்ப்புகள் அளித்தும் ஒருவர் சரியாக விளையாடாததால் மற்றவருக்கு வாய்ப்பளிக்க வேண்டியுள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் நால்வரும் சரியாக விளையாடாமல் இருந்தால் மேலும் மாற்றங்களை செய்யவேண்டி இருக்கிறது. அப்படியே செல்ல முடியாது. ஏனெனில், ஆட்டம் மாறிவிட்டது. ரன்கள் குவிக்காவிட்டால் கடினம்.

எப்போதுமே 180-200 ரன்கள் அடிக்க வேண்டுமெனக் கூறவில்லை. ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்றார்.

ஏலத்தில் தவறு செய்துவிட்டோம்..! ஒப்புக்கொண்ட சிஎஸ்கே பயிற்சியாளர்!

சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு அதன் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை என ஒப்புக்கொண்டுள்ளார். சேப்பாக்கில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் அணியுடனான போட்டி... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த கேட்ச்..! கமிந்து மெண்டிஸுக்கு குவியும் வாழ்த்துகள்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவ்ஸ் அடித்த பந்தினை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பிடித்த கேட்ச் விடியோ வைரலாகி வருகிறது.இலங்கையைச் சேர்ந்த கமிந்து மெண்டிஸ் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வருகிற... மேலும் பார்க்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த தனுஷ் கோட்டியான்!

மும்பை அணியின் ஆல்ரவுண்டரான தனுஷ் கோட்டியான் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்ட... மேலும் பார்க்க

பந்துவீச்சில் அசத்திய ஹர்ஷல் படேல்; 154 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிஎஸ்கே!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங... மேலும் பார்க்க

சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் ... மேலும் பார்க்க

சேப்பாக்கில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெவால்ட் ப்ரீவிஸ் களமிறங்குவாரா என்ற கேள்விக்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஃபிளெமிங் பதிலளித்துள்ளார். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயம் காரண... மேலும் பார்க்க