பஹல்காம் தாக்குதல்: நடுநிலை விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது, பழிபோடும் விளையாட்டுக்கு பஹல்காம் தாக்குதலும் மற்றோர் உதாரணமாகி விட்டது. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஆகையால், பொறுப்பான நாடாக, பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் நடுநிலையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என்று தெரிவித்தார்.
பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இதில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்தார்.
ஆனால், அதன் பின்னர், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக ஆதரவளித்து வருவதாகவும் பகீரங்கமாக கவாஜா ஒப்புக்கொண்டார்.
மேலும், இந்தத் தாக்குதலுக்கு ’லஷ்கர்-ஏ-தொய்பா’ பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ’தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பொறுப்பேற்றதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தளபதி மறுத்து விட்டார்.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்