பட்டாசு ஆலைகளின் பாதுகாப்பை இனியேனும் நெறிமுறைப் படுத்த வேண்டும்: இபிஎஸ் வலியுறு...
காஷ்மீரில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்
குப்வாராவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி, பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உளவுத்துறை தகவல்களின் பேரில், வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகாபாத் மசிலின் வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நாக சைதன்யா 24-ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் வெற்றிகரமாக கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் ஐந்து ஏஅக-47 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இதன்மூலம் பயங்கரவாதிகள் சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.