ஹரியாணா: நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது வாகனம் மோதல்: 7 பேர் பலி
ஹரியாணாவில் நெடுஞ்சாலையில் தூய்மைப் பணியாளர்கள் மீது பிக்அப் வாகனம் மோதியதில் 7 பேர் பலியாகினர்.
ஹரியாணா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச் சாலையை 11 தூய்மைப் பணியாளர்கள் சனிக்கிழமை காலை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பிக்அப் வாகனம் அவர்கள் மீது திடீரென மோதியது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். உடனே உள்ளூர்வாசிகள் போலீஸுக்கு தகவல் கொடுத்து, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவினர்.
கோர்ட் படத்தைப் பாராட்டிய சூர்யா, ஜோதிகா!
அவர்களில் சிலவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் தில்லிக்கு அனுப்பப்பட்டனர். பலியானவர்கள் ரேஷாம் (60), பிரேம் (60), ரத்னா (40), பிஸ்தா (30), ஜெய்தேய் (40), சதன்பதி (30), ஆஸ் முகமது (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து நிதி உதவிகளும் வழங்கப்படும் என்று நுஹ் மாவட்ட ஆணையர் விஷ்ரம் குமார் மீனா தெரிவித்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.