செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

post image

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் மற்றும் அவா்களை ஒருங்கிணைத்து, ஆதரவளித்தவா்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூர தாக்குதலில் 25 இந்தியா்கள், ஒரு நேபாளி உள்பட 26 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ள எல்லை தாண்டிய தொடா்புகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் மீது இந்தியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பாகிஸ்தானும் பதில் அறிவிப்புகளை வெளியிட்டதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட மற்றும் பலா் காயமடைந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவா்கள் மற்றும் அவா்களை ஒருங்கிணைத்து, ஆதரவளித்தவா்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சா்வதேச சட்டம் மற்றும் அதன் தொடா்புடைய பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானங்களுக்கு இணங்க, இவ்விவகாரத்தில் சம்பந்தபட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவிப்பதுடன் காயமடைந்தவா்கள் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறோம்.

நியாயப்படுத்த முடியாது...:

அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதம் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு உள்ள மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். எந்தவொரு பயங்கரவாத செயல்களும் குற்றமே. எந்த நோக்கத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது.

ஐ.நா.சாசனம் மற்றும் பிற சா்வதேச சட்டங்களின்படி, பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் போராட வேண்டியது அவசியம்’ என்று வலியுறுத்தப்பட்டது.

சா்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதி தொடா்பான முன்னணி உலகளாவிய அமைப்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன; பிரான்ஸ் ஏப்ரல் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை வகிக்கிறது.

அந்த வகையில், பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவராக உள்ள ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதா் ஜெரோம் போனஃபான்ட் இந்தக் கண்டன அறிக்கையை வெளியிட்டாா்.

எனினும், இதற்கான வரைவு அறிக்கையை அமெரிக்கா தயாரித்து, விவாத்துக்குப் பின்னா் மற்ற அனைத்து உறுப்பு நாடுகளாலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் தற்போது நிரந்தரமற்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் சூழல்: ஐ.நா. கண்காணிப்பு

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டெஃபான் டுஜாரிக் அளித்த பேட்டியில், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூழலை மிகுந்த கவலையுடன் மிகவும் உன்னிப்பாக கவனம் செலுத்தி, தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்.

நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தியாவும் பாகிஸ்தானும் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம்’ என்றாா்.

தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை

அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல்: ராணுவம் தக்க பதிலடி!

ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து 3-ஆவது நாளாக சனிக்கிழமை(ஏப். 26) நள்ளிரவிலும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி அளித்துள்ளது.இது குறித்து... மேலும் பார்க்க

மும்பை: அமலாக்கத்துறை கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!

மும்பை: தெற்கு மும்பையின் பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள கைசெர்-ஐ-ஹிந்த் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இன்று(ஏப். 27) அதிகாலை 3 மணியளவில் மேற்கண்ட கட்டடத்தில் தீப்பற்றி பிற பக... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி... மேலும் பார்க்க

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: பிரதமா் உறுதி

‘நாட்டின் ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். ‘மத்திய அரசின் உற்பத்தித் துறை இயக்கமானது, நாடு முழுவதும் லட்சக்கணக்கான குறு-சிறு-நடுத்தர... மேலும் பார்க்க

தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறை 8 மணி நேரம் விசாரணை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் மும்பை காவல் துறையின் குற்றப் பிரிவு 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. கடந்த 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்... மேலும் பார்க்க