தயார் நிலையில் கடற்படை! போர்க் கப்பல்கள் ஏவுகணை சோதனை
அரபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படைக் போர்க் கப்பல்கள் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து, கடற்படை வெளியிட்டுள்ள பதிவில், போர் கப்பல்களிலிருந்து அச்சுறுதல்களாக வரும் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் ஏவுகணை ஒத்திகையில் இந்திய கடற்படை போர்க் கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
தொலைதூர இலக்கை தாக்கும் நடவடிக்கைகளுக்கு கடற்படை தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. நமது நாட்டின் கடல்சார் பாதுகாப்பை உறுதிசெய்ய, எவ்வித அச்சுறுத்தல்கள் எந்நேரம் எந்த வகையில் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.