சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: கனடா நாட்டைச் சேர்ந்தவர் கைது
வாராணசி விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை கிளப்பினார்.
உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி விமான நிலையத்தில் இருந்து வாராணசி-பெங்களூரு இண்டிகோ விமானம் சனிக்கிழமை இரவு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் இருந்த வெளிநாட்டு பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழ அரசு உத்தரவு
வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, விமானம் முழுமையான ஆய்வுக்காக உடனே தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் வெடிக்கும் பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று விமான நிலைய இயக்குநர் புனீத் குப்தா தெரிவித்தார். இதுதொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு நிறுவனங்களிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு, விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டது. இதனால் வாராணசி விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.