பைக் - வேன் மோதல்; 11 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் பைக் மீது வேன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் விழுந்ததால் பயணிகள் பலியாகினர்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சௌர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையில் 13 பயணிகளுடன் சென்ற வேன் ஒன்று, பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. மேலும், பைக் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலிருந்த கிணற்றுக்குள் வேன் விழுந்தது.
வேன் மோதியதில் பைக்கில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதுமட்டுமின்றி, தண்ணீர் இருந்த கிணற்றுக்குள் விழுந்ததால், வேனில் பயணித்தவர்களில் 9 பேரும், அவர்களைக் காப்பாற்றச் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பலியாகினர்.
அதிர்ஷ்டவசமாக வேனில் பயணித்தவர்களில் 4 பேர் காப்பாற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும் மீட்புப் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
இதையும் படிக்க:உ.பி.: கைவிடப்பட்ட காரில் இளைஞர் சடலம், அருகே மது பாட்டிலும் மீட்பு