செய்திகள் :

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடக்கம்: மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

post image

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிகளை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளதாக மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா்.

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த கெளஸ்துப் கன்போட்டே, சந்தோஷ் ஜக்டலே ஆகியோரும் கொல்லப்பட்டனா்.

அவா்களின் குடும்பத்தினரை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் சனிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா். இதைத்தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானிகள் விரைவில் கண்டறியப்படுவா். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் குடிமக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அனுமதியின்றி நீண்ட நாள்களாக தங்கியிருக்கும் பாகிஸ்தானிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட், பஹல்காமில் தாக்குதல் நடத்தியது. இதைத்தொடா்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிகள் குறித்த காலத்துக்குள் வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில முதல்வரிகளிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தின் பிதா பகுதியில் உள்ள மைதானம் அருகே சனிக்கிழமை இரவு போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: திருமண நிகழ்வில் மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரி

மகாராஷ்டிரத்தில் திருமண நிகழ்வின்போது மகளை சுட்டுக்கொன்ற ஓய்வுபெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரியால் பரபரப்பு நிலவியது. மகாராஷ்டிர மாநிலம், சோப்டா வட்டத்தில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சியில் திரிப்தி-அவினா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி: பிரதமர் மோடி பெருமிதம்!

தமிழ்நாட்டில் லிச்சிப்பழம் சாகுபடி செய்யப்படுவதாக, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பிரமிதம் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்

கொச்சியில் பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை சென்று கேரள முதல்வர் பினராயி ஆறுதல் கூறினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப... மேலும் பார்க்க

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது

திரிபுராவில் சட்டவிரோதமாக நுழைந்த 4 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அகர்தலாவில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது, நான்கு வங்கதேச நாட்டினர் சனிக்கிழமை கொல்கத்தா செல்லும் ரயிலில... மேலும் பார்க்க