நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது: அமைச்சர் கோவி.செழியன்
விஜய்யின் பேச்சு திமுகவின் வெற்றியை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அருகே ஏனநல்லூர் கிராமத்தில் நகரப் பேருந்துச் சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறிய நிலையில் துணை வேந்தர்கள் மாநாட்டினை கூட்டும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்ற விவரம் புரிந்துகொண்ட துணை வேந்தர்கள், பதிவாளர்கள் ஊட்டியில் ஆளுநர் கூட்டிய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
பஹல்காம் தாக்குதலில் பலியானோரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்
ஆளுநர் அழைக்கக் கூடாத இடத்திற்கு அழைக்கிறார், எனவே, போகக் கூடாத இடத்திற்கு போகக் கூடாது என அவர்கள் செல்லவில்லை என்றார்.
மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும். இரண்டாவது இடம் யார் என்பதில் தான் மற்ற அணிகளுக்கு போட்டி. திமுகவின் வெற்றியை விஜயின் பேச்சு பாதிக்காது. பாதிக்கிற சூழல் தமிழகத்தில் இல்லை எனத் தெரிவித்தார்.