கனடா கலாசார விழாவில் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்த காா்: 9 போ் உயிரிழப்பு!
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்படவும், அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பது மற்றும் உதவிகளைப் பெறுவது குறித்து கிராம மக்களுக்கு ராணுவத்தினர் பயிற்சி அளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்மூலம், கிராம பாதுகாப்புக் குழுவை உருவாக்கி, அக்குழுவில் இடம்பெற்றவர்களுக்கு ஆயுதங்களைக் கையாளும் பயிற்சி மற்றும் சிறப்புத் திறன் வளர்க்கும் திட்டத்திலும் ராணுவத்தினர் இறங்கியுள்ளனர்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து எல்லைப்புற மாவட்டங்களிலுள்ள உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் பணிகளில் ராணுவம் இறங்கியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா நகரமான, அனந்த்நாக் மாவட்டத்திற்குட்பட்ட பெஹல்காமின் பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று (ஏப். 22) சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 3 தமிழர்கள் உள்பட 17 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில் தடயவியல் மற்றும் பிற நிபுணர்களின் உதவியுடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!