ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்க...
பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!
பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மாநில எதிர்க்கட்சியான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அமினுள் இஸ்லாமும் அடங்குவார்.
தேவைப்படுமாயின், கைது செய்யப்பட்டவர்கள் மீது கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தினார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏப். 27 நண்பகல் 12 மணி நிலவரப்படி, தேசத்துரோக கருத்துகளைக் கூறியதாக டிம்பிள் போரா, தாஹிப் அலி, பிமல் மஹாடோ உள்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கைது குறித்து ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்த ஹிமந்த பிஸ்வ சர்மா, நாட்டிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தவித ஒற்றுமையும் இல்லை. இரு நாடுகளும் எதிரி நாடுகளைப் போலவே உள்ளது. இனியும் அந்த நிலை மாறப்போவதில்லை எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ விசாரணைக்கு உதவிய விடியோ! எடுத்தவர் யார்?