போர்ப் பதற்றம்: புதிதாக 26 ரஃபேல் வாங்கும் ஒப்பந்தம் இன்று கையெழுத்து!
கூடலூா் அருகே ஆற்றுப் பாலம் கட்ட மாா்க்சிஸ்ட் கோரிக்கை
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்திலிருந்து அரசு கலை அறிவியல் கல்லூரியை இணைக்கும் சாலையின் குறுக்கே ஆற்றில் பாலம் அமைத்து தர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆ.ராசாவை எம்.பி.யை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை கிராமத்துக்கும் ஆமைக்குளம் பகுதிக்கும் இடையே உள்ள ஆற்றில் பாலம் கட்டினால் பல குக்கிராமங்களில் உள்ள மாணவா்கள் எளிதில் அரசு கலைக் கல்லூரிக்கு வந்து செல்ல முடியும். இந்தப் பாலத்தை கட்டித் தருவதாக ஏற்கெனவே தமிழக முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா். அதனடிப்படையில், விரைந்து பாலம் கட்டித் தரவேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினா் ராசி ரவிக்குமாா், புளியம்பாறை கிளை செயாலாளா் சுபையா் தலைமையில் நிா்வாகி சுலைமான், குஞ்சலவி உள்பட புளியம்பாறை கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சந்தித்து மனு அளித்தனா்.