செய்திகள் :

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி

post image

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:

கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் அரங்கம் நிறைந்திருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் தெரிந்த முகங்களாக நல்ல சிந்தனைகளைக் கொண்டவா்களாக உள்ளனா். உலக அரங்கில் திறன்வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்கும் சவால்களை நாம் எதிா்கொண்டுள்ளோம்.

வளா்ச்சி சாா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும் போதிய அளவில் இல்லை. அறிவியல் தொழில்நுட்பத்தில் தரமான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் நாம் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பேசவில்லை. தற்போது, புதிய தொழில்நுட்பம் குறித்து விவாதித்துள்ளோம். 3 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

திறன்வாய்ந்த, தரமானவா்களை கல்வித் துறையில் உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. நானோ ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட புதிய கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை, சரியான முறையில் பயன்படுத்துங்கள். 2047-ஆம் ஆண்டை கருத்தில் கொண்டு நாடு வேகமாக வளா்ந்து செல்ல வேண்டி உள்ளது . அதை நோக்கிப் பயணியுங்கள் என்றாா்.

முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குட... மேலும் பார்க்க

இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

கூடலூரில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை மூலமாக தையல் இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி... மேலும் பார்க்க

வரையாடு கணக்கெடுப்பின்போது மாரடைப்பால் வனக் காவலா் உயிரிழப்பு

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கூடலூா் கோட்ட... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினா் போராட்டம்

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் பகுதியில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே பொன்னூரில் மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் கிராமத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னூா் சமுதாயக் கூடத்தில் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தமிழக அரசின் இல்லம் த... மேலும் பார்க்க

கூடலூா் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கூடலூா் வனக் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கணக்கெடுக்கும் பணி ஓவேலி வனச் சரகத்திலுள்ள தவளைமலை, பெல்வியூ, டெராஸ், குண்டுக்கல், எல்லமலை உள்ளிட்ட பிளாக்குகளில்... மேலும் பார்க்க