எம்-சாண்ட், ஜல்லி விலையை ரூ.1000 குறைந்து விற்க தமிழ அரசு உத்தரவு
தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினா் போராட்டம்
தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் பகுதியில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள ராஜ்பவனில் துணைவேந்தா்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு எதிராகவும், ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்தும் உதகை மத்திய பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாா் திராவிட கழகம், தமிழ்ப் புலி கட்சியினா், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா், மக்கள் அதிகாரம், ஆதித் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, உதகை காபி ஹவுஸ் பகுதியில் கருப்புக் கொடியுடன் திராவிட தமிழா் கட்சியின் தலைவா் வெண்மணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 70-க்கும் மேற்பட்டவா்களை காவல் துறையினா் கைது செய்தனா். காங்கிரஸ் கட்சி சாா்பில் காபி ஹவுஸ் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவா்களை போலீஸாா் கைது செய்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.