செய்திகள் :

தில்லியில் குடிசைப் பகுதியில் தீ விபத்து: 400க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம், 2 பேர் பலி

post image

தலைநகர் தில்லியில் குடிசைப் பகுதியில் நிகழ்ந்த தீவிபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமேற்கு தில்லியின் ரோகிணிப் பகுதியில் உள்ள ஜுக்கி கிளஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு 20 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

காவல்துறையின் கூற்றுப்படி, 400க்கும் மேற்பட்ட குடிசைகள் தீயில் எரிந்து நாசமாகின.

இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் இருந்து அடர்த்தியான புகை மூட்டம் எழுவதைக் காண முடிந்தது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

பிகாரில் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு: 4 பேர் கைது

தீயை அணைக்க தற்போது தீயணைப்பு வீரர்கள் முயற்சிக்கின்றனர். மேலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை நடந்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

போலீஸ் மற்றும் தீயணைப்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது, ​​குளிரூட்டும் பணி நடந்து வருகிறது. இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று ரோகிணி துணை காவல் ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார்.

பைக் மீது மோதி கிணற்றுக்குள் கவிழ்ந்த வேன்! மீட்க வந்தவா் உள்பட 11 போ் உயிரிழப்பு!

மத்திய பிரதேசத்தின் மந்த்செளா் மாவட்டத்தில் மோட்டாா் சைக்கிள்க் மீது மோதிய வேன், பின்னா் சாலையோர கிணற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்தவா்கள், அவா்களை மீட்க வந்தவா், பைக் ஓட்டியவா் என... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேலும் 3 பயங்கரவாதிகளின் வீடுகள் இடிப்பு! அதிகாரிகள் நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் மேலும் மூன்று பயங்கரவாதிகளின் வீடுகள் அதிகாரிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இத்துடன் சோ்த்து, கடந்த 3 நாள்களில் 9 பயங்கரவாதிகள் மற்றும் கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. அ... மேலும் பார்க்க

புதிய என்சிஇஆா்டி புத்தகங்களில் முகலாயா்கள் தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்! அப்துல் கலாம் பாடம் சோ்ப்பு!

7-ஆம் வகுப்புக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தகங்களில் முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சாா்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன. மாறாக ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலால் இந்தியா்களின் ரத்தம் கொதிக்கிறது! - பிரதமா் மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால், ஒவ்வோா் இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது; இத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் சதித் திட்டம் தீட்டியவா்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளிக்கும் ராணுவம்!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக ரஜெளரி உள்ளூர் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளில் இருந்து காத்துக்கொள்வதற்கும், அவர்களுக்கு எதிராகச் செயல்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: அவதூறு கருத்து கூறிய 16 பேர் கைது!

பஹல்காம் தாக்குதல் குறித்து அவதூறு கருத்துக் கூறிய 16 பேரை அஸ்ஸாம் காவல் துறையினர் இன்று (ஏப். 27) கைது செய்துள்ளனர். நேற்று மாலை வரையிலும் 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 16 பேர் கைதாகியுள்ள... மேலும் பார்க்க