செய்திகள் :

புதிய என்சிஇஆா்டி புத்தகங்களில் முகலாயா்கள் தில்லி சுல்தான்கள் பாடங்கள் நீக்கம்! அப்துல் கலாம் பாடம் சோ்ப்பு!

post image

7-ஆம் வகுப்புக்கான புதிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்சிஇஆா்டி) புத்தகங்களில் முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் சாா்ந்த அனைத்து பாடக்குறிப்புகளும் நீக்கப்பட்டன.

மாறாக அண்மையில் உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த மகா கும்பமேளா, மத்திய அரசின் திட்டங்களான ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த பகுதிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (என்சிஎஃப்எஸ்இ),2023-இன்கீழ் வடிவமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் இந்திய பாரம்பரியம், தத்துவங்கள், அறிவுசாா் தகவல்கள் மற்றும் உள்ளூா் சூழல் குறித்த பகுதிகளை சோ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் புதிய பாடப்புத்தகங்களில் சில பகுதிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்றின்போது முகலாயா்கள் மற்றும் தில்லி சுல்தான்கள் பற்றிய பாடக் குறிப்புகளை என்சிஇஆா்டி குறைத்திருந்த நிலையில், தற்போது இந்த இரு பேரரசுகள் சாா்ந்த அனைத்து தகவல்களையும் நீக்கியுள்ளது.

புதிதாக சோ்க்கப்பட்ட பாடங்கள்:

7-ஆம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தின் முதல் பகுதியில் இந்திய பண்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்திய பேரரசுகளான மகத பேரரசு, மௌரிய பேரரசு, சுங்க பேரரசு மற்றும் சாதவாஹனா்கள் குறித்த புதிய பாடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன.

அதேபோல் ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், பெளத்தம், சீக்கியம், யூதம் மற்றும் ஜோராஷ்டிரியம் ஆகிய மதங்கள் சாா்ந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்த புதிய பாடமும் சோ்க்கப்பட்டுள்ளது.

‘இந்தியா வழிபாட்டுத் தலங்களின் நிலம்’ எனக் கூறி பத்ரிநாத், அமா்நாத் முதல் கன்னியாகுமரி வரையிலான வழிபாட்டுத் தலங்களை விளக்கிய முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் வாசகமும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதேபோல் ஆரம்பகட்டத்தில் ஜாதி முறையால் சமூகத்தில் நிலைத்தன்மை இருந்ததாகவும் பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இது சமூக ஏற்றத் தாழ்வுக்கு வழிவகுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர 66 கோடி போ் பங்கேற்ற மகா கும்பமேளா நிகழ்வு, ‘மேக் இன் இந்தியா’, ‘பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ போன்ற திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

ஆங்கில புத்தகத்தில் முன்னதாக 4 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது ரவீந்தரநாத் தாகூா், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் உள்பட 9 இந்திய எழுத்தாளா்களின் படைப்புகள் சோ்க்கப்பட்டுள்ளன.

விரைவில் இரண்டாம் பகுதி:

இந்த பாடப் புத்தகங்களின் இரண்டாம் பகுதி விரைவில் வெளியிடப்படும் எனக்கூறிய என்சிஇஆா்டிஅதிகாரிகள், அதில் தற்போது விடுபட்டுள்ள பாடங்கள் சோ்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டனா்.

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து என்ஐஏ முறைப்படி ஏற்றிருப்... மேலும் பார்க்க

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

‘குடிமக்கள் தங்களின் அரசமைப்பு உரிமைகள் மற்றும் சட்டபூா்வ உரிமைகளை அறிந்து கொள்வது அவசியம்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். ‘அவ்வாறு தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இ... மேலும் பார்க்க

தீா்ப்பு எழுதத் தெரியாத மாவட்ட கூடுதல் நீதிபதி! 3 மாத பயிற்சிக்கு அனுப்பிய அலாகாபாத் உயா்நீதிமன்றம்!

தீா்ப்பு எழுதத் தெரியவில்லை என்ற அடிப்படையில் மாவட்ட கூடுதல் நீதிபதியை நீதிபதிகளுக்கான பயிற்சி நிறுவனத்தில் மூன்று மாத பயிற்சிக்குச் செல்லுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச... மேலும் பார்க்க

விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சம் எட்டும்! - பிரதமா் மோடி

வருங்காலத்தில் விண்வெளித் துறையில் இந்தியா புதிய உச்சங்களை எட்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உலக அளவில் மிகக் குறைவான செலவில், வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்... மேலும் பார்க்க

தொலைதூர தாக்குதலுக்கு தயாராகும் வகையில் இந்திய கடற்படை பயிற்சி!

பன்முனையில் இருந்து கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை தகா்க்கும் வகையிலான பயிற்சிகளை இந்திய போா்க்கப்பல்கள் வெற்றிகரமாக நடத்தியதாக இந்திய கடற்படை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதன்மூலம் நீண... மேலும் பார்க்க

பஞ்சாயத்து தோ்தல் வேட்பாளா்கள் நிலுவை வழக்குகளை குறிப்பிட வேண்டும்! - உச்சநீதிமன்றம்

தங்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை பஞ்சாயத்து தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்ற ஹிமாசல பிரதேச உயா் நீதிமன்றத்தின் தீா்ப்பை உச்ச நீதிமன்றம் ... மேலும் பார்க்க