இந்திய மகளிரணி சுழலில் வீழ்ந்த இலங்கை..! வெற்றிபெற 148 ரன்கள் இலக்கு!
ஐசிசி மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை 50 ஓவா்கள் போட்டி இந்தியாவில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ளது. அதற்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
இதையொட்டி இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்க மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடா் கொழும்பு பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய-இலங்கை அணிகள் மோதின.
மழையின் காரணமாக போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இலங்கை அணி 38.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஹாசினி ஃபேரேரா 30 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் ஸ்நேஹ ராணா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இவருடன் தீப்தி சர்மா, நல்லபுரெட்டி சரணி தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்திய மகளிரணி அதிரடியாக விளையாட தொடங்கியுள்ளது. 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்மிருதி மந்தனா 16, பிரதிகா ராவல் 5 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.