பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
முதல் டெஸ்ட் தோல்வி எதிரொலி: 2-வது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் மாற்றம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சில்ஹட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே வங்கதேசத்துக்கு அதிர்ச்சியளித்தது.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக செயல்படுவார்: ரவி சாஸ்திரி
வங்கதேச அணியில் மாற்றம்
முதல் டெஸ்ட்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வங்கதேச அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான அனமுல் ஹாக் ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 32 வயதாகும் அவர் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.
Opener Anamul Haque marks a return to the Bangladesh squad for the second Test against Zimbabwe
— ICC (@ICC) April 24, 2025
More here ➡️ https://t.co/tHZmntEQd1pic.twitter.com/MfGABzk2bo
இடதுகை சுழற்பந்துவீச்சாளரான தன்விர் இஸ்லாம் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தொடக்க ஆட்டக்காரர் ஸாகிர் ஹாசன் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் நஹித் ராணா இருவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வங்கதேச அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.