செய்திகள் :

புதிய எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் மாடல்களை அறிமுகப்படுத்திய ஹெச்பி!

post image

மடிக்கணினி உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்பி நிறுவனம் புதிய வகை மாடல்களான எலைட்புக், புரோபுக், ஆம்னிபுக் ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

எலைட்புக், புரோபுக் ஆகியவை இண்டெல்கோர் அல்ட்ரா 200வி சீரிஸ் மற்றும் க்வால்காம் செயலிகளால் இயக்கப்படுகின்றன. ஆம்னிபுக்ஸ் இண்டெல் மற்றும் ஏஎம்டியால் இயக்கப்படுகிறது. இந்த மடிக்கணினிகள் அனைத்தும் புதிய வகை செய்யறிவால் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மடிக்கணினிகளின் விலை ரூ.77,200-லிருந்து தொடங்கும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்பி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த மடிக்கணினியின் வரிசையில் HP Elite Book 8 G1i, 8 G1a, 6 G1a மற்றும் 6 G1q; HP Pro Book 4 G1q; மற்றும் HP Omni Book Ultra, X Flip, 7 Aero மற்றும் Omni Book 5 ஆகியவை அடங்கும்.

HP Elite Books மற்றும் Pro Books ஆகியவை நிறுவன பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் Omni Book AI வகை மடிக்கணினிகள் ஃப்ரீலான்ஸர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன . 

ஹெச் அறிமுகம் செய்துள்ள புதிய மடிக்கணினிகளின் விலை

  • HP EliteBook 8 G1i - ரூ.1,46,622

  • HP EliteBook 6 G1q - ரூ.87,440

  • HP ProBook 4 G1q - ரூ.77,200

  • HP Omni Book Ultra 14 - ரூ.1,86,499

  • HP Omni Book X Flip 14 - ரூ.1,14,499

  • HP Omni Book 7 Aero - ரூ.87,499

  • HP Omni Book 5 - ரூ.78,999

இதையும் படிக்க:6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

ஓரியண்டல் ஹோட்டல் 4-வது காலாண்டு லாபம் ரூ.17.69 கோடி!

சென்னை: தி இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓரியண்டல் ஹோட்டல் லிமிடெட் 2025 ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் அதன் லாபம் ரூ.17.69 கோடி ஈட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்து... மேலும் பார்க்க

டாடா டெக்னாலஜிஸ் 4-வது காலாண்டு நிகர லாபம் 20% அதிகரிப்பு!

புதுதில்லி: டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக 20.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.188.87 கோடி ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு சந்தைகளில் எதிர்மறையான போக்குக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமையன்று 7 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சரிந்து வர்த்தகமான நிலையில், முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடி... மேலும் பார்க்க

6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

மாருதி சுசூகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்களுடன் ஈக்கோ எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 80 பிஎச்பி திறனுடன் 104.4nm முடுக்குவிசைத் திறன... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன், கேமிரா… இந்த வார ரிலீஸ்!

ஸ்மார்ட்போன்கள், கேமிரா, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ளன.இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி+குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பல்வேறு ஸ்மார்ட்ப... மேலும் பார்க்க