பந்துவீச்சில் அசத்திய ஹர்ஷல் படேல்; 154 ரன்களுக்கு ஆட்டமிழந்த சிஎஸ்கே!
6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!
மாருதி சுசூகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்களுடன் ஈக்கோ எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 80 பிஎச்பி திறனுடன் 104.4nm முடுக்குவிசைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
5 மேனுவல் கியர் பாக்ஸ் வசதியுடன் புதிய வசதிகளுக்கு ஏற்ப 20 சதவிகித எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்தும் வகையில் என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில், 70 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் சிஎன்ஜி வேரியண்ட்டும் உள்ளது.
புதிய மேம்படுத்தப்பட்ட இந்த மாடலில் ஒரு இருக்கை குறைக்கப்பட்டு 7 சீட்டுகளுக்குப் பதிலாக 6 சீட்கள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்பு அம்சமாக விலை உயர்ந்த கார்களுக்குப் போட்டியாக 6 ஏர் பேக்குகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிக்க: ஸ்மார்ட்போன், கேமிரா… இந்த வார ரிலீஸ்!

இந்த காரில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19 கிலோ மீட்டர் மைலேஜும், எத்தனால் கலந்த பெட்ரோலுடன் 26 கிலோ மீட்டர் வரை மைலேஜும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை; ரூ.6.05 லட்சத்திலிருந்து ரூ.6.95 வரை இருக்கும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை காருக்கு இந்தியாவில் நேரடியாக எந்த போட்டியாளரும் இல்லை என்றாலும், ரெனால்ட் ட்ரைபர் போட்டியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ்!