பஹல்காம் தாக்குதல் ஹிந்து - முஸ்லீம் பிரச்னை அல்ல! - காஜல் அகர்வால்
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!
மும்பை: உள்நாட்டு சந்தைகளில் எதிர்மறையான போக்குக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமையன்று 7 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிந்தது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் சந்தை உணர்வை அதிக எடைபோட்டதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.17 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது அதிகபட்சமாக ரூ.85.08 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.85.65 ஐ தொட்ட நிலையில், முடிவில் 7 காசுகள் சரிந்து ரூ.85.40ஆக முடிந்தது.
நேற்றைய அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.85.33-ஆக இருந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!