செய்திகள் :

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சரிந்து வர்த்தகமான நிலையில், முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடிந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,004.04 புள்ளிகள் சரிந்து 78,797.39 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 338.1 புள்ளிகள் சரிந்து 23,908.60 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 588.90 புள்ளிகள் சரிந்து 79,212.53 புள்ளிகளிலும், நிஃப்டி 207.35 புள்ளிகள் சரிந்து 24,039.35 புள்ளிகளிலும் நிலைபெற்றது.

நாட்டின் மூன்றாவது பெரிய தனியார் துறை வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு லாபம் ரூ.7,117 கோடியாக சரிந்ததையடுத்து நிறுவனத்தின் பங்குகள் இன்று 4.5 சதவிகிதம் சரிந்து முடிந்தது. இதுவே நிறுவனத்தின் கடந்த ஆண்டு லாபம் ரூ.7,130 கோடியாக இருந்தது.

சென்செக்ஸில் அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பவர் கிரிட், எடர்னல், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிந்தும் இன்போசிஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குகள் உயர்ந்து முடிந்தது.

நிஃப்டியில் எஸ்பிஐ லைஃப், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, இன்போசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் அதானி எண்டர்பிரைசஸ், ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் ட்ரெண்ட் ஆகியவை சரிந்து முடிந்தது.

மார்ச் காலாண்டு முடிவுகளைத் தொடர்ந்து, நிஃப்டி 50 குறியீட்டில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் 5 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்ந்து அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாக உருவெடுத்தது.

மாருதி சுசூகி நிகர லாபம் 4% சரிந்ததையடுத்து, அதன் பங்குகள் 2 சதவிகிதத்திற்கும் மேலாக சரிந்தது முடிந்தது. வாகன உற்பத்தியாளரான மாருதி சுசூகி 2024ஆம் நிதியாண்டில் பங்கு ஒன்றுக்கு ரூ.135 ஈவுத்தொகையை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு, டோக்கியோவின் நிக்கேய் - 225, ஷாங்காய் எஸ்எஸ்இ காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்து முடிந்தது.

அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) கணிசமான உயர்வுடன் முடிவடைந்தன. நாஸ்டாக் காம்போசிட் 2.74 சதவிகிதமும், எஸ் அண்ட் பி-500 2.03 சதவிகிதமும், டவ் ஜோன்ஸ் இண்டஸ்ட்ரியல் சராசரி 1.23 சதவிகிதமும் உயர்ந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.8,250.53 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.65 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 66.98 டாலராக உள்ளது.

இதையும் படிக்க: 6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

டாடா டெக்னாலஜிஸ் 4-வது காலாண்டு நிகர லாபம் 20% அதிகரிப்பு!

புதுதில்லி: டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் 2025 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-வது காலாண்டில், வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபமாக 20.12 சதவிகிதம் அதிகரித்து ரூ.188.87 கோடி ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு சந்தைகளில் எதிர்மறையான போக்குக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமையன்று 7 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங... மேலும் பார்க்க

6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

மாருதி சுசூகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்களுடன் ஈக்கோ எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 80 பிஎச்பி திறனுடன் 104.4nm முடுக்குவிசைத் திறன... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன், கேமிரா… இந்த வார ரிலீஸ்!

ஸ்மார்ட்போன்கள், கேமிரா, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ளன.இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி+குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பல்வேறு ஸ்மார்ட்ப... மேலும் பார்க்க

குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ்!

மிகக் குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்யுவி வாகனங்கள் பெயர் பெற்ற ஹூண்டாய் நிறுவனம் மலிவு விலையில் சிஎன்ஜி இயங்கக்கூடிய ஒரு... மேலும் பார்க்க

விண்டேஜ் மாடலில் கவாஸகி எலிமினேட்டர் 500!

விண்டேஜ் மாடலில் நவீன அம்சங்களுடன் கவாஸகி எலிமினேட்டர் 500 பைக்கை கவாஸகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திள்ளது. இந்த க்ரூஸர் பைக்கில் 451சிசி, இரட்டை லிக்விட் கூல்ட் என்ஜின் 45 குதிரைத்திறனுடன் 42... மேலும் பார்க்க