செய்திகள் :

ஸ்மார்ட்போன், கேமிரா… இந்த வார ரிலீஸ்!

post image

ஸ்மார்ட்போன்கள், கேமிரா, கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் இந்த வாரம் விற்பனைக்கு வந்துள்ளன.

இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி+

குறைந்த விலையில் அதிக தொழில்நுட்ப அம்சங்களுடன் கூடிய பல்வேறு ஸ்மார்ட்போன்களை இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தாண்டு தொடக்கம் முதல் வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது நோட் வரிசையில் 50எஸ் 5ஜி+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6.78 இன்ச் 144 எச்இசட் 3டி அமோலெட் திரை, மீடியாடெக் 7300 சிப்செட், ஆண்டிராய்டு 15 இயங்குதளம் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், 5500 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி பின்புறக் கேமிரா, 13 எம்பி முன்புற செல்ஃபி கேமிரா, 128/256  ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி ரேம் வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 14,999.

போலராய்டு ஃபிளிப்

எளிதில் உபயோகிக்கக் கூடிய போலராய்டு ஃபிளிப் இன்ஸ்டண்ட் கேமிரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கேமிராவில் 4 லென்ஸ் அளிக்கப்பட்டுள்ளதால், புகைப்படங்களை துல்லியமாவும் அழகாகவும் எடுக்க உதவுகிறது.

 உடனடியாக புகைப்படங்களை பிரிண்ட் செய்யும் வகையில் பிரிண்டர், பிளிம் உள்ளிட்டவை கேமிராவுடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமிராவின் விலை ரூ. 21,400.

பென்க்யூ எம்ஏ270யூ

மேக்புக்-களுக்கு பயன்படுத்தும் வகையில் பென்க்யூ நிறுவனம் எம்ஏ270யூ (MA270U) மாடல் கணினி திரையை அறிமுகம் செய்துள்ளது.

மேக்புக்-களில் காணப்படும் நிறத்தை 95 சதவிகிதம் பிரதிபலிக்கும் வகையில் இந்த கணினி திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கணினி திரையை வசதிக்கேற்ப மேலே, கிழே இறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. டைப் சி போர்ட், 2 எச்டிஎம்ஐ போர்ட், 2 யூஎஸ்பி போர்ட், ஐபேட் மற்றும் ஐபோன்களை இயக்குவதற்கான போர்ட் உள்ளன. விலை ரூ. 41,998.

மார்னிங் மினி

காபி பிரியர்களுக்காக மார்னிங் மினி என்ற காபி இயந்திரம் அறிமுகமாகியுள்ளது. சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை பயணத்தின்போது எடுத்துச் செல்ல முடியும்.

தொடுதிரை மூலம் காய்ச்சும் நேரத்தையும், வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் முடியும். இதன் விலை ரூ. 29,990.

பூமா ஷூ

பூமா நிறுவனம் ’ஃபாஸ்ட்-ஆர் நைட்ரோ எலைட் 3’ ஷூ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தடகள வீரர்களின் பயன்பாட்டுக்காக குறைந்த எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஷூ, தற்போது சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. விலை ரூ. 25,600.

விக்டோரினாக்ஸ் ஐ.என்.ஓ.எக்ஸ். க்ரோனோ (இந்தியா பதிப்பு

விக்டோரினாக்ஸ் நிறுவனம் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஐ.என்.ஓ.எக்ஸ். க்ரோனோ மாடல் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 500 கடிகாரங்களை மட்டுமே விற்பனைக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

ரோஸ் கோல்ட் மற்றும் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கடிகாரத்தின் விலை ரூ. 89,000.

கூகுள் பிக்சல் 9ஏ

சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பிக்சல் 9 மாடலின் அடுத்தகட்ட வெர்சானான 9ஏ அப்டேட்களுடன் தற்போது அறிமுகமாகியுள்ளது.

ஆண்டிராய்டு 15 இயங்குதளம், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. உள்நினைவக வசதி, 6.3 அங்குல எச்.டி. பிளாஸ் போலெட் தொடுதிரை, 5,100 எம்.ஏ.எச். பேட்டரி, டென்சார் ஜி-4 ப்ராசஸர், 422.2 பி.பி.ஐ. கிராபிக்ஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மேலும், 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் பின்புற கேமிரா, 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் பின்புற மேமிரா, 12 மெகா பிக்சல் முன்புற கேமிரா உள்ளிட்ட வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள பிக்சல் 9ஏ விலை ரூ. 49,999.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.85.40-ஆக முடிவு!

மும்பை: உள்நாட்டு சந்தைகளில் எதிர்மறையான போக்குக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வெள்ளிக்கிழமையன்று 7 காசுகள் குறைந்து ரூ.85.40 ஆக முடிந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

மும்பை: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் சரிந்து வர்த்தகமான நிலையில், முடிவில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிந்து முடி... மேலும் பார்க்க

6 ஏர்பேக்குகளுடன் ரூ.6 லட்சத்தில் மாருதி சுசூகி ஈக்கோ!

மாருதி சுசூகி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட நவீன அம்சங்களுடன் ஈக்கோ எம்பிவி காரை உருவாக்கியுள்ளது. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. 80 பிஎச்பி திறனுடன் 104.4nm முடுக்குவிசைத் திறன... மேலும் பார்க்க

குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ்!

மிகக் குறைந்த விலையில் சிஎன்ஜி வசதியுடன் ஹூண்டாய் எக்ஸ்டர் இஎக்ஸ் காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்யுவி வாகனங்கள் பெயர் பெற்ற ஹூண்டாய் நிறுவனம் மலிவு விலையில் சிஎன்ஜி இயங்கக்கூடிய ஒரு... மேலும் பார்க்க

விண்டேஜ் மாடலில் கவாஸகி எலிமினேட்டர் 500!

விண்டேஜ் மாடலில் நவீன அம்சங்களுடன் கவாஸகி எலிமினேட்டர் 500 பைக்கை கவாஸகி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்திள்ளது. இந்த க்ரூஸர் பைக்கில் 451சிசி, இரட்டை லிக்விட் கூல்ட் என்ஜின் 45 குதிரைத்திறனுடன் 42... மேலும் பார்க்க

2027-க்குள் புதிய மின்சார வாகனங்களை அறிமுகம் செய்யும் வோக்ஸ்வாகன்!

வோக்ஸ்வாகன் குழுமம் 2027-க்குள் 20க்கும் மேற்பட்ட முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது, வோக்ஸ்வாகன் குழுமம் அதன் பிராண்டுகளிலிருந்து பத்து புதிய மாடல்களை வழ... மேலும் பார்க்க